SuperTopAds

பிரேசில் நாட்டில் கொரோனாவல் 5 ஆயிரம் பேர் பலி!!

ஆசிரியர் - Editor III
பிரேசில் நாட்டில் கொரோனாவல் 5 ஆயிரம் பேர் பலி!!

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

அங்கு 72 ஆயிரத்து 899 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த உயிரிழப்புகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரு மாத கால இடைவேளியில் நடந்துள்ளது.

போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும், வைரஸ் யாருக்கு பரவியிருக்கிறது என்ன கண்டறிய போதிய பரிசோதனை கருவிகள் இல்லாததாலும் வைரஸ் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் வீடுகளிலேயே உயிரிழந்துவரும் (2 வாரங்களில் 236 பேர்) கொடுமையான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. 

இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து கொரோனாவுக்கு அடுத்த இலக்காக பிரேசில் நாடு மாறி வருகிறது.

இந்த நிலைமையின் தீவிரத்தன்மையை உணராத அந்நாடு அதிபர் ஜெயிர் போல்சனரோ கொரோனா வைரசை 'சிறிய காய்ச்சல்’ என்றும் அதனால் நாட்டிற்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டாம் எனவும் தெரிவித்து வருகிறார். 

மேலும், மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்திய அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரியான லூயிஸ் ஹெண்டிக்யூ மண்டிட்டாவையும் அதிபர் போல்சனரோ கடந்த 18 ஆம் திகதி மந்திரி பதவியில் இருந்து நீக்கிவிட்டார்.

பிரேசிலில் தற்போது தட்பவெப்பநிலையாலும், போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தாலும் கொரோனாவின் அடுத்த இலக்காக மாறிவருகிறது. குறிப்பாக வைரஸ் பரிசோதனை வசதிகள் இல்லாததால் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.