தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசுவதை காண முடியவில்லை

ஆசிரியர் - Editor IV
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசுவதை காண முடியவில்லை

ரஞ்சன் ராமநாயக்க  போல் எத்தனையோ தமிழ் மக்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களை வெளியில் கொண்டுவர போராடலாம் .

ரஞ்சன் ராமநாயக்க  போல் எத்தனையோ தமிழ் மக்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களை வெளியில் கொண்டுவர போராடலாம் .ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ப்பதற்காக   உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு   அந்தப் பிரச்சினைகளை   பெரும்பாலும் பேசுவதை காண முடியவில்லை என என‌ உல‌மா க‌ட்சி தலைவர்  முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம்  கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி காரியாலயத்தில்  பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு சனிக்கிழமை(25) இரவு இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது ப‌ற்றி  மேலும் குறிப்பிட்ட‌தாவ‌து


அண்மனை காலங்களாக  இந்த அரசாங்கத்தை ஒரு பாரிய பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் பல விமர்சனங்களை முன்னாள் பா.உ  சுமந்திரன்  செய்து கொண்டு வருகிறார் எனபதை  நாங்கள் பார்க்கின்றோம். அது தேர்தல் முறையாகட்டும் அல்லது கொரோணா தொற்று காரணமாக நடைமுறை படுத்தியுள்ள ஊரடங்கு சட்டமுறையாகட்டும் இவை  அனைத்து விடயத்திலும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  பாரிய பல குற்றச்சாட்டுக்களையும் பாரிய பல விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டிருப்பது உண்மையிலேயே. இந்த அரசாங்கத்தை ஆதரித்த  ஒரு ஆதரவுக் கட்சி என்ற வகையில் நாங்கள் மன வருத்தப் படுகிறோம். ஏனெனில்  ஒரு விமர்சன தெரிகின்ற போதும் அதற்கான காலசூழலும் இருக்கிறது என பார்க்கின்றோம். இந்தக் கொரோனா தொற்றால் வல்லாதிக்க  அமெரிக்கா கூட என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் நமது நாட்டின் ஜனாதிபதி மிகவும் கடுமையான சட்டங்களையும் நிருவாகங்களையும்  ஏற்படுத்தி எவ்வளவு தூரம் இந்த வைரஸை  கட்டுப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

 இந்நிலையில்  அரசாங்கத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு  உள்ளாகும் நிலைமையில்  சுமந்திரன் அவர்கள் கருத்து தெரிவித்து தெரிவித்திருப்பது ஒரு மனிதாபிமான ஒரு செயலாக நாங்கள் காணவில்லை. இவ்வாறான விடயங்களை  அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ப்பதற்காக வேண்டி தான்.ஆனால்  அந்தப் பிரச்சினைகளை சுமந்திரன் பெரும்பாலும் பேசுவதை காண முடியவில்லை.  ஆனால் இவர் சில தீய சக்திகளுக்கு விலை போனவர் போன்று தீய சக்திகளுக்கு ஆதரவாக வேண்டுமென்றே அரசாங்கத்தை  குழப்ப வேண்டும் என்பது போன்று பேசிக் கொண்டு இருக்கின்றார்.  இவர் அடிக்கடி சஜித் பிரேமதாசவின் கட்சி உறுப்பினர்களுக்கு அவர் மிகவும் ஆதரவாக இருப்பது போன்று தெரிகிறது. ரன்ஜன்  ராமநாயக்கவிற்கு தன்னுடைய  அனைத்தை தியாகங்களையும் செய்து கொண்டிருக்கின்றார் ரஞ்சன் ராமநாயக்க  போல் எத்தனையோ தமிழ் மக்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களை வெளியில் கொண்டுவர போராடலாம் .

அடிக்கடி சஜித் பிரேமதாசவின் கட்சி உறுப்பினர்களுக்கு அவர் மிகவும் ஆதரவாக இருப்பதாக காண்கின்றோம். ரஞ்சன் ராமநாயக்காவிற்காக வேண்டி தன்னுடைய அனைத்து தியாகத்தையும் செய்ய கூடியவராக இருக்கின்றார் .அதே போல் எத்தனையோ தமிழ் மக்கள் சிறைச்சாலையிலிருந்து வெளியில் வர முடியாமல் இருக்கிறார்கள் அவர்களை வெளி கொண்டுவர முயற்சி செய்யலாம்.ரஞ்சன் ராமநாயக்காவிற்கு முண்டியடித்து செயற்படுவதை நிறுத்தி தமிழ் மக்களுக்காக செயற்பட வேண்டும் முடிந்தால் அப்பாவி முஸ்லிம் மக்களுக்காக போராடலாம் அதை விடுத்து ஏகாதிபத்திய கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட கூடாது என குறிப்பிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு