காரைதீவு பிரதேசத்தில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பில் வாதப்பிரதிவாதம்
சுகாதார சேவைகளில் ஈடுபடுவோர் தெய்வமாக போற்றப்படுகின்ற இந்த வேளையில் சில
அதிகாரிகள் அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர்.
காரைதீவு பிரதேச சபையின் 26 வது மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர்
கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் காலை 10 மணியளவில்
சபையின் கூட்ட மண்டபத்தில் ஆரம்பமானது.
இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீர்த்த பொது மக்களுக்கு சபையில்
இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தொடரின் போது உறுப்பினர்களிடையே வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றது.
இதன்போது காரைதீவு பிரதேச சபையில் காரைதீவு பிரதேசத்தில் கொரோனா வைரஸ்
தாக்கத்தினால் தொழில் நலிவுற்ற அன்றாட கூலி தொழிலாளர்களுக்கு நிவாரண
உதவிகளை மேற்கொண்டு வரும் தனி நபர்கள் , அரச சார்பற்ற நிறுவனங்கள் , புலம்
பெயர் அமைப்புக்கள் அனைவருக்கும் சபையில் நன்றி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து காரைதீவு பிரதேச பொது சுகாதார உத்தியோகத்தர்கள் காரைதீவு
பிரதேசத்தில் உள்ளூர் வியாபாரிகள் , விற்பனையாளர்களுக்கு அனுமதி மறுத்திருந்த
போதிலும் ஆனால் வெளி பிரதேசங்களில் இருந்து இங்கு அனுமதித்திருக்கிறார்கள்
வ