SuperTopAds

எதை அழித்தாலும் எம்மிடமிருந்து இதை மட்டும் அழிக்க முடியாது..! மனமிருந்தால் பாராட்டுங்கள்..

ஆசிரியர் - Editor I
எதை அழித்தாலும் எம்மிடமிருந்து இதை மட்டும் அழிக்க முடியாது..! மனமிருந்தால் பாராட்டுங்கள்..

கெங்காதரன் பவதாரணி 

கடந்த 2009ஆம் ஆண்டு பங்குனி மாதம் மாத்தளன் பகுதியில் இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலில் தன்னுடைய தந்தையாரை பறிகொடுத்து அந்த எறிகணைத் தாக்குதலில் காயமடைந்த நிலையில் சக்கர நாற்காலியில் நடமாடி வருகிறார்.

தன்னுடைய ஆறு வயதில் தனது தந்தையாரை பறிகொடுத்த குறித்த சிறுமி தன்னுடைய கல்வியை திறம்பட முன்னெடுத்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கடந்த வருடம் இடம்பெற்ற 

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றி 8A B சித்திகளை பெற்று தனது பாடசாலைக்கும் தனது சமூகத்திற்கும் முன்னுதாரணமாக விளங்குவதோடு மாற்றுத்திறனாளிகள் ஆன தங்களாலும் சாதிக்க முடியும் 

என்பதையும் மாற்றுத்திறனாளிகள் என்பவர்கள் யார் என்பதையும் நிரூபித்து இருக்கிறார். 

மதியழகன் விதுர்சிகா 

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து மக்கள் வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஆனந்தகுமார சுவாமி நலன்புரி நிலையத்தில் சென்று

அங்கு 2009 புரட்டாதி மாதம் இராணுவத்தினரது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மதியழகன் விதுர்சிகா முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாட்காலியில் நடமாட நிர்ப்பந்திக்கப்படடாள் மீள்குடியேற்றம் வந்து 

முள்ளியவளை முதலாம் வட்டாரம் பகுதியில் குடியேறிய போதும் முதலாமாண்டு கல்வியை கற்பதற்கு உரிய காலத்தை கடந்த நிலையில் இரண்டாம் ஆண்டிலிருந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்த குறித்த மாணவி 

கடந்த வருடம் இடம்பெற்ற கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6A B 2C சித்திகளை பெற்று தனது பாடசாலைக்கும் தனது சமூகத்திற்கும் முன்னுதாரணமாக விளங்குவதோடு மாற்றுத்திறனாளிகள் ஆன 

தங்களாலும் சாதிக்க முடியும் என்பதையும் மாற்றுத்திறனாளிகள் என்பவர்கள் யார் என்பதையும் நிரூபித்து இருக்கிறார்.