SuperTopAds

முல்லைத்தீவு மக்களுக்கு பிராந்திய சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை..! கொரோனா அபாயம் உள்ளது, அவதானமாக நடவுங்கள்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மக்களுக்கு பிராந்திய சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை..! கொரோனா அபாயம் உள்ளது, அவதானமாக நடவுங்கள்..

முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் கொரோனா நோயாளியுடன் பணித்த 71 பேர் நுழை ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் நடமாடியிருக்கும் நிலையில், ஊரடங்கு தளர்த்த ப்பட்டாலும் மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்ப்பது நல்லது. 

மேற்கண்டவாறு மாவட்ட பிராந்திய சுகாதார சுகாதார வைத்திய அதிகாரி மருத்து வர் சுகந்தன் கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கடந்த 21 ஆம் திகதி விடுமுறை நிறைவு செய்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 

திரும்பும்போது இவர்களுடன் கூட பயணித்த வெலிசறை கடற்படைமுகாமில் பணியாற்றும் ஸ்ரீபுரவை சேர்ந்த கடற்படை சிப்பாய் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதனையடுத்தே 

குறித்த நடவடிக்கையை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார் . புதுமாத்தளன் பகுதில் உள்ள இராணுவ பயிற்சி முகாமில் புதிதாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் முகாமில் 71 படையினரையும் தனிமைப்படுத்தலுக்கு 

உள்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 38 பேர் இன்று காலை அந்த தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் படையினர் விடுப்பில் 

வீடு சென்ற நிலையில் கடந்த 21ஆம் திகதி ஒழுங்கு படுத்த பட்ட தனியார் பேருந்து ஒன்றில் கடமைக்குத் திரும்பியுள்ளனர். வெலிஓயாவைச் சேர்ந்த தனியார் ஒருவரின் பேருந்தில் அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். 

அந்தப் பேருந்தில் விடுப்பில் வீடு திரும்பிய வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படைச் சிப்பாய் ஒருவரும் பயணித்துள்ளார்.அவர் அநுராதபுரம் சிறிபுர என்ற இடத்தில் இறங்கியுள்ளார். 

இந்த நிலையில் அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்தப் பேருந்து வெலிஓயா, முல்லைத்தீவு, கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு படை முகாங்களுக்குச் 

சென்று படையினரை இறக்கியுள்ளது. சுமார் 71 படையினர் இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட முகாம்களில் இறங்கியுள்ளனர். அவர்களை இனங்கண்டு புதுமாத்தளன் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று 

தனிமைப்படுத்தலில் வைக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்தோடு பேரூந்தை செலுத்திய சாரதி மற்றும் நடத்துனரை தனிமை படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கையையும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் 

பணிமனை மேற்கொண்டுள்ளனர். அத்தோடு இந்த பேரூந்தில் பயணம் செய்து மணலாறு பகுதியில் உள்ள படை முகாம் ஒன்றில் இறங்கிய சிப்பாய்கள் இருவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவர்கள் இருவரையும் 

மேலதிக பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார் .இவ்வாறு பேருந்தில் வந்தவர்கள் எந்ததந்த இடங்களில் 

தரித்து நின்றனர், கடைகளுக்குச் சென்றனரா? உள்ளிட்டவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மக்கள் அனாவசியமாக ஊரடங்கு தளர்த்தப்படும் காலங்களிலும் 

வெளியே செல்லாது வீடுகளில் இருப்பதே சிறந்தது எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.