SuperTopAds

விவசாய நடவடிக்கை மேற்கொள்ள எந்தவித தடைகளும் இல்லை-மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகே

ஆசிரியர் - Editor IV
விவசாய நடவடிக்கை மேற்கொள்ள எந்தவித தடைகளும் இல்லை-மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகே

விவசாயம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை.ஆயினும்    பலர் விவசாய நடவடிக்கைகளுக்கு செல்வதாக அனுமதியை பெற்று மண்வெட்டியுடன் நடமாடுவதுதை குறைத்து கொள்ள வேண்டும் என  அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகே தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச சபை  ஏற்பாட்டில்  நாவிதன்வெளி பிரதேச சபையின் பதில் தவிசாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான ஏ.கே.அப்துல் சமட் தலைமையில் சவளக்கடை  மற்றும் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்மந்தமாக பிரதேச செயலாளர்கள் ,பிரதே சபை உறுப்பினர்கள்   உட்பட்ட அனைத்து பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டும் நிகழ்வு சனிக்கிழமை(25) மாலை மத்தியமுகாம் தொழிற்பயிற்சி அதிகார சபை கேட்போர் கூடத்தில்    இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட 24படைப்பிரிவின்  இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகே அவர்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்மந்தமாக மக்களுக்கு பள்ளிவாசல்கள் ஊடாக தெளிவான முறையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியில் செல்வதுஇஒன்று கூடுவதுஇ ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் இராணுவ தளபதியினால் தெளிவுபடுத்தும் பட்டது.

இதன்போது இஸ்லாமியர்களின் புனித ரமழான் நோன்பு காலத்தில் இஸ்லாமிய மத தலைவர்கள் மாத்திரம் பள்ளிவாசல்களுக்கு சென்று  ஒலி பெருக்கிகள் மூலம் மத பிரசங்கங்களை ஜும்மா பள்ளிகளில் மூலம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும்  இருந்த போதிலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மதித்து செயற்பட வலியுறுத்தினார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் சுய தனிமைப்படுத்தில் இருந்த காரணத்தினால் ஏனைய பிரதேசத்திற்கு பரவாமல் இருந்தது அது போன்று நாம் மிகவும் கட்டுக்கோப்புடன் நடந்து கொள்ள வேண்டும் . பலர் விவசாய நடவடிக்கைகளுக்கு செல்வதாக அனுமதியை பெற்று மண்வெட்டியுடன் அலுவலகத்திற்கு   செல்வது போன்று ஆடைகளுடன்  வீதியில்   நடமாடுவதுதை குறைத்து கொள்ள வேண்டும் என   அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகேவினால் அறிவுரை வழங்கப்பட்டது.  

 

இந்நிகழ்வில்  நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், 241 படைப்பிரிவின் தளபதி கேணல் ஜானஹ விமலரத்ன ,நாவிதன்வெளி  உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா, சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீர், மத்திய முகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.ஏ விஜயசிங்க   ,  அன்னமலை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி சமந்த கொடிதுவக்கு , நாவிதன்வெளி பிரதேச சபையின் உறுப்பினர் எம்.பி.நிவாஸ் ,சர்வமத தலைவர்கள், ஆலய பள்ளிவாசல் அறங்காவலர்கள், கிராம அபிவிருத்தி சங்கபிரதிநிதிகள், என பலர் கலந்துகொண்டனர்.