திடீரென மயங்கி விழுந்த இராணுவ சிப்பாய் மரணம்..! தனிமைப்படுத்தலில் இருந்ததால் கொரோனா என சந்தேகம், கிளிநொச்சி- ஜெயபுரத்தில் சம்பவம்..
கிளிநொச்சி- ஜெயபுரம் பகுதியில் உள்ள இராணுவமுகாம் ஒன்றில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் கொரோனா சந்தேகத் தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிரு க்கின்றது. இதேவேளை உயிரிழந்த சிப்பாய் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த
28 வயதானவர் என கூறப்படுகின்றனர். இவருக்கு இம்மாதம் தொடக்கத்தில் விடுமுறையில் வீடு சென்று கடந்த 14 தினங்களிற்கு முன்பே மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இவ்வாறு பணிக்குத் திரும்பிய சிப்பாய்
முகாமில் தனிமைப் படுத்தலில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுக்காலை குறித்த இராணுவச் சிப்பாய் முகாமில் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயம் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை கண்டறியப்பட்டது. இதனால் குறித்த இராணுவச் சிப்பாயின் உடலம்
பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இவ்வாறு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழப்பிற்கு கொரோனா காரணமாக எனக் கண்டறியும் நோக்கில் மாதிகரிள் பெறப்பட்டு
அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு அதன் பெறுபேறுகள் கிடைக்கும் வரையில் உடலம் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.