SuperTopAds

கொரோனா அபாயம் உள்ள மாவட்டங்களில் இருந்து கிளிநொச்சிக்குள் நுழைந்துள்ள 27 பேர்..! தனிமைப்படுத்த முடியாது. சுகாதார பணிப்பாளர் கருத்து..

ஆசிரியர் - Editor I
கொரோனா அபாயம் உள்ள மாவட்டங்களில் இருந்து கிளிநொச்சிக்குள் நுழைந்துள்ள 27 பேர்..! தனிமைப்படுத்த முடியாது. சுகாதார பணிப்பாளர் கருத்து..

கிளிநொச்சி மாவட்டத்திற்கு கொரோனா அச்சம் உள்ள மாவட்டங்களிலிருந்து வந்த 27 நபர்களை தனிமைப்படுத்தாமல் வெளியில் விட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச் சத்தை உண்டாக்கியிருக்கின்றது. 

தென்னிலங்கையிலிருந்து தொழில் நிமிர்த்தம் கடந்த 21,22,23 அகிய திகதிகளில் கிளிநொச்சிக்கு களுத்துறை, குருநாகல், அநுராதபுரம், மாத்தறை, கேகாலை 

போன்ற மாவட்டங்ளிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள மத்திய அரசின் உத்தரவுக்கமைய கைவிடப்பட்டுள்ளது. 

என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார். வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள 

மேற்குறித்த மாவட்டங்களிலிருந்து வருகைதந்த 22 பணியாளர்களை தனிமைப்படுத் த  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்கொண்ட நடவடிக்கை 

தங்களின் பணிப்புக்கமைய கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்கிளிநொச்சிக்கு பணிக்க்காக வந்தவர்களை தனிமைப்படுத்த மேற்கொண்ட முயற்சியினை தொடர்ந்து 

அவர்கள் சுகாதார அமைச்சுக்கு அதனை தெரியப்படுத்த அங்கிருந்து எமக்கு கிடைத்த அறிவித்தலுக்குமைய ஆதாவது லொக் டவுன் செய்யப்பட்ட பிரதேசங்களை 

தவிர்ந்து ஏனைய பிரதேசங்களிலிருந்து வருகை தருபவர்கள் தனிமைப்படுத்த முடியாது என்ற அறிவித்தலுக்குமைய அவர்களை தனிமைப்படுத்தாது 

விடுவிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சிலிருந்து அறிவித்தல் கிடைத்தது. அதனை நாம் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 

வழங்கியதன் காரணமாக அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் எனத் தெரிவித்தார்.நாட்டில் மாவட்டங்களுக்கு இடையேயான 

போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அவசிய தேவை கருத்தி போக்குவரத்தில் ஈடுப்படுகின்றவர்கள் பொது சுகாதார பரிசோதகர், சுகாதார வைத்திய அதிகாரி, 

ஆகியோரின் பரிசோதனை அறிக்கையை பெற்றே பயணிக்க வேண்டும் என்ற இறுக்கமான நடவடிக்கை பேணப்பட்டு வரும்போது இதில் எந்த அறிக்கையும் இன்றி 

பிரச்சினைக்குரிய மாவட்டங்களிலிருந்து கிளிநொச்சிக்கு வந்தவர்கள் தனிமைப்படுத்தப்படாது விடுவிக்கப்பட்டமை 

மக்கள் மத்தியில் கடும் கடண்டத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு வந்தவர்களுடன் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரும் 

கிளிநொச்சியில் உள்ள குறித்த ஓபந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்துள்ளனர். அத்தோடு தற்போது இவர்கள் கிளிநொச்சி உதயநகர், கனகபுரம், பெரியபரந்தன் 

ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளில் எவரினதும் கண்காணிப்பும் இன்றி காணப்படுகின்றனர். 

இது தொடர்பில் கிளி நொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் அவர்களை தொடர்பு கொள்ள 

பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவர் பதிலளிக்கவில்லை.