நீர் விநியோக குழாய் பொருத்த வெட்டப்பட்ட குழியில் விழுந்து ஒருவர் பலி..! அதிகாலையில் துயரம்..
நீர் விநியோகத்திற்கான குழாய் பொருத்துவதற்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
இந்த சம்பவம் வவுனியா- சிவபுரம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த நபர் இரவில் தவறுதலாக குறித்த குழிக்குள் விழுந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
மேலும் குழியில் அதிகளவு நீர் காணப்படுகின்றது.