SuperTopAds

மட்டக்களப்பு சாலையின் அம்பாறை மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போராட முஸ்தீபு

ஆசிரியர் - Editor IV
மட்டக்களப்பு சாலையின் அம்பாறை மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போராட முஸ்தீபு

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலையில் கடமையாற்றும் அம்பாறை மாவட்டதில் வசிக்கும் ஊழியர்கள் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் தாங்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறு   வியாழக்கிழமை (23 ) காலை கல்முனை பேருந்து சாலை (பஸ் டிப்போ) முன்பாக கூடினர்.

இவ் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள்  எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பாக  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த  சாரதிகள்;  நடத்துனர்கள் உள்ளிட்ட 28 பேர் மட்டக்களப்பு போக்குவரத்து சாலையில் கடமையாற்றுகின்றோம். தற்போதைய சூழ் நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வருவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்ககின்றோம். ஆகவே அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எங்களுக்கு கல்முனை சாலையில் தற்காலிகமாக கையொப்பமிடுவதற்கு எற்பாடுகளை செய்து தரவேண்டும். அல்லது போக்குவரத்து ஊழியர்களான 28 பேருக்கும் தனியாக போக்குவரத்து வசதியை எற்படுத்தி தர வேண்டும்.

மட்டக்களப்புக்கு கடமைக்கு சென்று இரவு வீடு வந்து சேரும்வரை உணவு கிடைப்பது பெரும் சிரமாக உள்ளது  கடைகள் மூடிக்காணப்படுகின்றன. என தங்கள் சிரமங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை பேருந்து சாலை முகாமையாள ஜௌபருடன் தொடர்பு  கொண்டு கேட்டபோது

இவ்விடயம் தொடர்பாக இங்கு ஊழியர்கள் கையொப்பம் இடுவதற்கு மட்டக்களப்பு சாலை முகாமையாளரும் பிராந்திய முகாமையாளரும் அனுமதி தரவேண்டும் அனுமதித்தால் இங்கு கையொப்பம் இட ஏற்பாடுகளை செய்வேன் என்றார்.

மட்டக்களப்பு பேருந்து சாலை முகாமையாளர் கிருஸ்ணராஜ் உடன் தொடர்பு கொண்ட போது

28 ஊழியர்களும் மட்டக்களப்பு சாலைக்கு கடமைக்கு வரவேண்டிய தேவை காணப்படுகின்றது அவர்களுக்கான போக்குவரத்து எற்பாடுகள் பிராந்திய முகாமையாளரின் அனுமதியுடன் ஒழுங்கு செய்யப்படும் என்றார்.

பிராந்திய முகாமையாளர் விஜிதவுடன் தொடர்புகொண்ட கேட்டபோது

போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக உள்ளதால் ஊழியர்கள் அவர்கள் பணிபுரியும் சாலைகளுக்கு  செல்ல வேண்டியது கட்டாயமாக காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு சாலையில் கடமையாற்றும் ஊழியர்களுக்காக விஷேடமாக நாளை 24 ஆம் திகதி முதல் போக்குவரத்துக்கான பேருந்து ஒழுங்க செய்யப்பட்டுள்ளது .காலை 5.30 மணிக்கு அம்பாறையில் இருந்து புறப்படும் மட்டக்களப்பு சாலையில் இருந்து மாலை 5.00 மணிக்கு அம்பாறையை நோக்கி புறப்படும் எனத்தெரிவித்ததுடன் இன்று அம்பாறையைச் சேர்ந்த இந்த 28 ஊழியர்களும் தங்கள் இடம் பெயர் விபரங்களை கல்முனை சாலையில் வழங்குமாறும் இது தொடர்பாக கல்முனை மற்றும் மட்டக்களப்பு சாலை முகாமையாளருக்கு அறிவிப்பதாகவும் கூறினார்.