T-56 ரக துப்பாக்கி சம்மாந்துறையில் மீட்பு விவகாரம் -மற்றுமொரு சந்தேக நபரும் கைதானார்

ஆசிரியர் - Editor IV
T-56 ரக துப்பாக்கி சம்மாந்துறையில் மீட்பு விவகாரம் -மற்றுமொரு சந்தேக நபரும் கைதானார்

துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபருக்கு சூட்டுபயிற்சி வழங்கியதாக சந்தேகத்தில் மற்றுமொரு சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை(20) இரவு 9.30 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி  சூடு ஒன்று இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய 26 வயதுடைய சந்தேக நபர்  மறுநாள் கைதாகி இருந்தார்.

குறித்த கைதான சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் மேலதிக தகவலை பெற்ற பின்னர்  வியாழக்கிழமை(23) இன்று சம்மாந்துறை மலையடிக்கிராமம் 1 ஐ சேர்ந்த 38 வயதினையுடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.இவ்வாறு இரண்டாவதாக  கைதான  சந்தேக நபர் ஏலவே கைதான சந்தேக நபருக்கு   துப்பாக்கி சுடுவது  குறித்து  பயிற்சி அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று கைதான இரண்டாவது  சந்தேக நபரது இடது கையில் 4 விரல் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஏலவே  மீட்கப்பட்ட துப்பாக்கியை சட்டவிரோதமாக மறைத்து வைத்தமை அதனை பயன்படுத்த உதவி செய்தமை துப்பாக்கி சூட்டு  பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு அமைய இச்சந்தேக நபர் கைதாகியுள்ளார்.இது தவிர பயங்கரவாத குழுக்களுக்கும் கைதான சந்தேக நபர்களுக்கும் ஏதாவது தொடர்புகள் உள்ளதா என பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.மீட்கப்பட்ட துப்பாக்கி பாகிஸ்தான் நாட்டு தயாரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை வெள்ளிக்கிழமை(24) இரண்டவது சந்தேக நபரை   சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில்   ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை  நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார்

பின்னிணைப்பு


இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபர்  ரீ-56 ரக துப்பாக்கியுடன் கைதானார்.

இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் திங்கட்கிழமை(20) இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய கிழக்கு மாகாண  சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தனவின் கட்டளைக்கமைய    அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அயாஷ கருணாரத்தினவின் மேற்பார்வையில்      அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்  எம்.ஜெயந்த ரத்னாயக்க நெறிப்படுத்தலில்  கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தரவின்  நேரடிக் கண்காணிப்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் தலைமையில்   சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர் துப்பாக்கி சூடு இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள்(செவ்வாய்க்கிழமை(21)  26 வயதுடைய சந்தேக நபரையும் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு மறைத்து வைத்திருந்த ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் 9 ரவையுடன் கூடிய  ரவைக்கூட்டையும் மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தின் போது இரு துப்பாக்கி வேட்டுக்களை சந்தேக நபர் தீர்த்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையின் இருந்து தெரிய வந்துள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு