SuperTopAds

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டியது!! -உயிரிழப்பு 590 ஆக உயர்ந்து-

ஆசிரியர் - Editor III
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டியது!! -உயிரிழப்பு 590 ஆக உயர்ந்து-

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்தது. மேலும் குறித்த வைரஸ் தாக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,601 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1336   பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

47  பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3252 பேர் குணமடைந்துள்ளனர். 

மகாராஸ்டிர மாநிலத்தில் அதிக அளவாக 4666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 232 பேர் உயிரிழந்துள்ளனர். 

தலைநகர் டெல்லியில் 2081 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 47  பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 17 ஆக உள்ளது.