ஊரடங்குவேளையில் ஏழை மக்களின் வயிற்றிலடிக்கும் மனித மிருகங்கள்..!
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகளை திருடி இறைச்சிக்காக கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றது.
ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதிகளை சாதமாகப் பயன்படுத்தி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் மூன்று பசுமாடுகள் இவ்வாறு பரிதாபமான நிலையில் களவாடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றும்(19) இவ்வாறு குறித்த பகுதியின் பசுமாடு ஒன்று கொல்லப்பட்டு, அதன் தலை மற்றும் தோல்கள் கால்வாய்பகுதியில் கழிவுகளாக போடப்பட்டுக் கிடந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.