தீடீர் சுகயீனத்தால் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம்..! கொரோனா பரிசோதனைக்காக இரத்த மாதிரி அனுராதபுரம் அனுப்பிவைப்பு, வவுனியாவில் சம்பவம்..
திடீர் சுகயீனமடைந்த நிலையில் சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், குறித்த சிறுமியின் இரத்த மாதிரிகள் கொரோனா தொற்று பரிசோதனைக்காக அனுராதபுரம் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது.
வவுனியா- தேக்கவத்தை பகுதியை சேர்ந்த அயிஸ்டன் சர்மி (வயது7) என்ற சிறுமியே திடீர் சுகயீனமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணடைந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுமி கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு தொற்றுநீக்கல் செய்யப்பட்டுள்ளது.