SuperTopAds

இந்தியாவில் கொரோனா பலி 507 ஐ தாண்டியது!!

ஆசிரியர் - Editor III
இந்தியாவில் கொரோனா பலி 507 ஐ தாண்டியது!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 712 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 712 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 15 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,230 ஆக உள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.