SuperTopAds

இந்தியாவில் நோயாளிகள் எண்ணிக்கை 14,000-ஐ கடந்தது

ஆசிரியர் - Admin
இந்தியாவில் நோயாளிகள் எண்ணிக்கை 14,000-ஐ கடந்தது

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 14,000-ஐ கடந்துவிட்டது. இதுவரை 14,378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; நேற்று ஒரே நாளில் 826 பேருக்கு தொற்று ஏற்பட்டது; 28 பேர் இறந்தனர். இதுவரை 480 பேர் இறந்துள்ளனர். 

இந்தியாவில் 1,514 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை 3,320ஐ கடந்துவிட்டது. 

அம்மாநிலத்தில் 201 பேர் இறந்துள்ளனர். அடுத்த இடங்களில் டெல்லி, தமிழ் நாடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் இருக்கின்றன. நாட்டிலேயே மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது.