இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.45.20 கோடி நிதி உதவி
தீவிரமாக பரவி வரும் கொரோனா நோயைத் தடுப்பதற்காக, இந்தியாவுக்கு 45.20 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிதியுதவி, கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவும். இதே போல, ஆப்கானிஸ்தானுக்கு 137 கோடி ரூபாயும், வங்க தேசத்துக்கு 73.54 கோடி ரூபாயும், பூடானுக்கு 3.82 கோடி ரூபாயும், நேபாளத்துக்கு 3.78 கோடி ரூபாயும், பாகிஸ்தானுக்கு ரூ.72.01 கோடி ரூபாயும், இலங்கைக்கு 9.95 கோடி ரூபாயும் அமெரிக்கா வழங்கியுள்ளது.