லண்டனில் திங்கள் முதல் பேருந்துக்கட்டணம் இலவசம்- சதிக் கான்
போக்குவரத்து (டி.எஃப்.எல்) ஊழியர்கள் 26 பேர்இறந்ததை அடுத்து தொடருந்து மற்றும்பேருந்துகளில் கட்டாய முகக்கவசங்களை அணியவேண்டும் என்று லண்டன் மேயர் சதிக் கான் இன்று தெரிவித்துள்ளார்.
ஓட்டுனர்களைப் பாதுகாக்க பக்கவாட்டு கதவுகளை மட்டுமே பயன்படுத்தி பயணிகள் ஏற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் திங்கள்கிழமை முதல் பஸ் பயணம் இலவசமாக இருக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் நாம் அனைவரும்முகமூடிகளை தொடர்ந்து அணியவேண்டும் அப்பொழுதுதான் கோவிட் -19 பரவுவதை தடுக்கமுடியும் என்றும், பாதுகாப்பின் மற்றுமொரு அங்கமாக முகமூடி அணிவது குறித்த ஆலோசனையை மாற்றுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாக இன்று காலை பிரித்தானிய ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் மேயர் சதிக் கான் தெரிவித்தார்.
மருத்துவமற்ற சாதாரண முகக்கவசங்களை அணிவதால் நீங்கள் கவனக்குறைவாக வேறு ஒருவருக்கு கோவிட் -19 கொடுக்கலாம் என்று கான் கூறினார்.