SuperTopAds

கிளிநொச்சி சதோச விற்பனை நிலைய விவகாரம்..! அதிரடி நடவடிக்கையில் களமிறங்கியது ஜனாதிபதி செயலகம், மனித உரிமைகள் ஆணைக்குழு..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி சதோச விற்பனை நிலைய விவகாரம்..! அதிரடி நடவடிக்கையில் களமிறங்கியது ஜனாதிபதி செயலகம், மனித உரிமைகள் ஆணைக்குழு..

கிளிநொச்சி நகரில் உள்ள சதோச விற்பனை நிலையத்தில் ஊரடங்குவேளையில் அதிகளவு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சகல விபரங்களையும் தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலகம், மற்றும் மனித உரிமை ஆணைக்குழு ஆகியன ஊடகவியலாளரிடம் கேட்டுள்ளன. 

கிளிநொச்சியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த சமயம் சதோச விற்பனை நிலையத்தை பூட்டிவிட்டு உள்ளே பெருமளவு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டமையினையும், அவை பாரவூர்தி ஒன்றில் ஏற்பட்டமை தொடர்பாகவும் ஊடகவியலாளர் சப்தசங்கரி வெளிப்படுத்தியிருந்தார். 

இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்காக விசாரணை குழு ஒன்றை மாவட்ட செயலர் அமைத்துள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி செயலகம், மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியன விபரங்களை கேட்டிருக்கின்றன. 

இந்நிலையில் தன்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்பிக்கவுள்ளதாக கூறியிருக்கும் ஊடகவியலாளர் சப்தசங்கரி, ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட சதோச விற்பனை நிலையம் ஊடாக முறைகேடுகள் நடக்க இடமளிக்க முடியாது. என கூறியிருக்கின்றார்.