SuperTopAds

அமெரிக்காவை ஆட்டிவைக்கும் கொரோனா!! -7000 இலட்சம் பேர் பாதிப்பு-

ஆசிரியர் - Editor III
அமெரிக்காவை ஆட்டிவைக்கும் கொரோனா!! -7000 இலட்சம் பேர் பாதிப்பு-

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்துள்ளது. மேலும், வைரசுக்கு நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 22 இலட்சத்து 48 ஆயிரத்து 864 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 15 இலட்சத்து 23 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பரவியவர்களில் இதுவரை 5 இலட்சத்து 71 ஆயிரத்து 523 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த கொடிய வைரசுக்க்கு இதுவரை ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 145 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 7 இலட்சத்து 9 ஆயிரத்து 735 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 32 ஆயிரத்து 165 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 535 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.