கொரோனா மருத்துவ சேவையில் சுவீடன் இளவரி!!
சுவீடனில் நாட்டு இளவரி கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் நேரடியாக இறங்கி தனது சேவையை தொடங்கியுள்ளார்.
ஐரோப்பிய நாடான சுவீடனில் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 1,200 ற்க்கும் அதிகமானோரின் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது.
இந்த நிலையில், அந்த நாட்டின் இளவரசி சோபியா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்ற தொடங்கியுள்ளார்.
35 வயதான இவர், ஆன்லைன் மூலம் 3 நாள் சிறப்பு பயிற்சியினை முடித்த பின்பு தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள சோபியாஹெமெட் மருத்துவமனையில் தனது சேவை பணியை தொடங்கி இருக்கிறார்.
மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக சேர்ந்துள்ள இளவரசி சோபியா, கொரோனா நோயாளிகளை கையாள்வதில் நேரடியாக ஈடுபட மாட்டார். அதே சமயம் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகின்றார்.