ஊரடங்கு எதிரொலி: சென்னையில் குற்றங்கள் 79 சதவீதம் குறைந்துள்ளன!
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதால் வாகன நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பொதுமக்களில் பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் சென்னையில் அனைத்து குற்றங்களும் 79 சதவீதம் குறைந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொலை வழக்கில் 44 சதவீதம், கொள்ளை வழக்கில் 75 சதவீதம், வீடு புகுந்து திருடுதல் வழக்கில் 59 சதவீதம் என்ற அளவில் குற்றங்கள் குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.