கோவிட்-19: ஸ்பெயினில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் - 19,000 பேர் பலி!
சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகில் உள்ள 210க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்திவருகிறது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. அதைத்தொடர்ந்து இத்தாலியிலும், ஸ்பெயினிலும் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா வைரசுக்கு இன்று மேலும் 550 பேர் பலியாகினர். இதையடுத்து அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியது.
தற்போதைய நிலவரப்படி ஸ்பெயினில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 120 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.