இந்தியாவிற்கு கொரோனா எச்சரிக்கை!! -மே மாதம் உச்சத்தை அடையும் என்று கணிப்பு-
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மே மாதம் உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
அதன்பின்னரான காலப்பகுதியில் படிப்படியாக கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாபவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடையலாம் என்றும், அதன்பின்னர் குறையும் என்றும் என்றும் உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கை இப்போது இருப்பதை விட கடுமையாக நடைமுறைப்படுத்தினால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.