SuperTopAds

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில், சமுர்த்தி உத்தியோக அடையாள அட்டையுடன் கஞ்சா கடத்தியவன் கைது..!

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில், சமுர்த்தி உத்தியோக அடையாள அட்டையுடன் கஞ்சா கடத்தியவன் கைது..!

சமுர்த்தி உத்தியோகஸ்த்தரின் அடையாள அட்டையை பயன்படுத்தி கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டிருப்ப துடன், குறித்த நபர் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. 

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் ஒலுவில் நிந்தவூர் பிரதான வீதியில் உள்ள கழியோடை பாலத்தில் சம்மாந்துறை பொலிஸாரினால் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட சோதனைச்சாவடியில் புதன்கிழமை(14) அதிகாலை இச்சந்தேக நபர் கைதானார். 

வீதிச் சோதனைச் சாவடியில் ஈடுபட்டிருந்த சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தொழிலில் இருந்து நீக்கப்பட்ட குறித்த சந்தேக நபர் சமுர்த்தி அலுவலக அடையாள பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், இரு வருடங்களுக்கு முன்னர் 

அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் பெறப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேகநபரை பொலிசார் கைது செய்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரிடம் தற்போது விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் குறித்த சந்தேகநபர் 

சமூர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அட்டாளைச்சேனை பகுதியில் இருந்து நிந்தவூர் பகுதிக்கு போதைப் பொருட்களை கடத்தி வந்துள்ளதாகவும் பெலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.