SuperTopAds

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய ஆயுர்வேத மருந்துகள் கையளிப்பு

ஆசிரியர் - Editor IV
ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய ஆயுர்வேத மருந்துகள் கையளிப்பு

கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு   அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தின் ஒரு பகுதியில்  கடற்படையினரால்  பராமரிக்கப்படுகின்ற  தனிமைப்படுத்தல்  முகாம் வைத்திய பொறுப்பதிகாரியிடம்   நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய வகையில்  ஒரு தொகுதி  ஆயுர்வேத மருந்து வகைகள்  புதன்கிழமை(14) நண்பகல்   வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இத்தனிமைப்படுத்தல் முகாமிற்கு  சென்று பராமரிப்பாளர் அங்கிகள் முகக்கச கண்ணாடிகள் உள்ளிட்ட  ஆயுர்வேத மருந்து வகைகளை   வழங்கியதுடன் தனிப்படுத்தல் முகாம்  பராமரிக்கப்படுகின்ற நிலைமைகளை வைத்திய   பொறுப்பதிகாரியிடம் கேட்டறிந்து கொண்டனர்.

அத்துடன்  குறித்த தனிமைப்படுத்தல் முகாமை   கடற்படையினருடன் இணைந்து எவ்வாறு   பராமரிப்பது என்பது தொடர்பாக பலதரப்பட்ட    தீர்மானங்கள் இவ்விஜயத்தின் போது  எடுக்கப்பட்டது

 இவ்விஜயத்தில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணனுடன்  கல்முனை பிராந்திய சுதேச வைத்திய துறைக்கான இணைப்பாளர் டாக்டர் எம்.ஏ நபீல் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.