கொரோனாவில் இருந்து மீண்ட 4.23 இலட்சம் நோயாளிகள்
உலகம் முழுவதும் 210 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 4.23 இலட்சம் நோயாளிகள் சிகிச்சையின் பின்னர் மீண்டும் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 18 இலட்சத்து 53 ஆயிரத்து 155 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 247 பேர் உயிரிழந்துள்ளனர். 4 இலட்சத்து 23 ஆயிரத்து 625 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 13 இலட்சத்து 15 ஆயிரத்து 283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 50 ஆயிரத்து 853 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரசால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் அமெரிக்கா, இத்தாலியை விஞ்சி முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 22,115 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இத்தாலியில் 19,899 பேர் உயிழந்துள்ளனர். ஸ்பெயினில் 17,209 பேரும், பிரான்சில் 14,393 பேரும், பிரிட்டனில் 10,612 பேரும், ஈரானில் 4,474 பேரும், சீனாவில் 3,341 பேரும் பலியாகி உள்ளனர்.