JAFFNAZONE இணைய ஊடக நிறுவனத்தின் நிவாரண பணி முல்லைத்தீவு- பூதன்வயல் கிராமத்தில் இன்று..!
முல்லைத்தீவு- பூதன்வயல் கிராமத்தில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு JaffnaZone இணைய ஊடக நிறுவனத்தினால் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உணவு பொருட்கள் இன்று வழங்கப்பட்டிருக்கின்றது.
கொரோனா தொற்று காரணமாக நாடாளாவியரீதியில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டத்தினால் மக்கள் பொிதும் வாழ்வாதார நெருக்கடியினை எதிர்கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறே முல்லைத்தீவு மாவட்டத்தில் பூதன்வயல் கிராமத்தில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட 30 குடும்பங்கள் தொடர்பான தகவல் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஊடாக வழங்கப்பட்ட நிலையில், JaffnaZone இணைய ஊடக நிறுவனத்தினால் இன்றைய தினம் குறித்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருக்கின்றது.
இதன்படி வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு அரிசி, மா, மிளகாய்த்தூள், வெங்காயம், சீனி, தேயிலை, சோயா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உணவுப்பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.