SuperTopAds

உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து..! விவசாயி உடல் நசுங்கி பலி, முள்ளிவாய்க்காலில் துயரம்..

ஆசிரியர் - Editor I
உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து..! விவசாயி உடல் நசுங்கி பலி, முள்ளிவாய்க்காலில் துயரம்..

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசா யி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவ து, வயல் விதைப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில்

உழவு இயந்திரத்தை தயார் செய்துகொண்டு வீட்டிலிருந்து புறப்பட்ட குறித்த விவசாயி பயணம் செய்த உழவு இயந்திரத்தை திருப்ப முற்பட்டவேளை 

கட்டுப்பாட்டையிழந்து தடம்புரண்டு விபத்துக்குளாகியுள்ளது .இதன்போது உழவு இயந்திரத்துக்குள் சிக்கி குறித்த விவசாயி பலியாகியுள்ளார் . 

 பாலியானவர் முள்ளிவாய்க்கால் கிழக்கை சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் 

விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .