SuperTopAds

கொரோனா பரவிய ஒரே மாதத்தில் அதற்கான தீர்வை கண்டறிந்த பெண் ஆய்வாளர்: மூடி மறைத்த சீனா!

ஆசிரியர் - Admin
கொரோனா பரவிய ஒரே மாதத்தில் அதற்கான தீர்வை கண்டறிந்த பெண் ஆய்வாளர்: மூடி மறைத்த சீனா!

உலகெங்கும் கோர தாண்டவமாடும் கொரோனா கிருமியின் மரபணுவை வரிசைப்படுத்தி, அதற்கான தீர்வை ஜனவரியிலேயே கண்டறிந்த ஆய்வாளரை சீனா மிரட்டி பணியவைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா- வுஹானில் வெளவால் பெண்மணி என அறியப்படும் Shi Zhengli என்ற பிரபல வைரஸ் ஆய்வாளரே கொரோனா வைரஸ் தொடர்பில் அதன் மரபணுக்களை வரிசைப்படுத்தி, தீர்வையும் வெளியிட்டவர். 

இவரே சீனாவின் வெளவால் குகைகளில் மறைந்திருக்கும் சார்ஸ் போன்ற கொடிய வைரஸ்களை அடையாளம் கண்டவர். மட்டுமின்றி, வுஹான் நகரில் கொரோனா பரவிய தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து அதை உறுதிப்படுத்தியும் உள்ளார்.

தொடர்ந்து மூன்றே நாட்களில் அதன் மரபணுவை வரிசைப்படுத்தி, கொரோனாவுக்கான தீர்வையும் கண்டறிந்துள்ளார். ஆனால் சீனா நிர்வாகம் இந்த தகவலை அறிந்து, அவரை மிரட்டி தங்களுக்கு சாதகமாக அவரை பணிய வைத்துள்ளது. ஆய்வாளர் Shi கண்டறிந்த தகவல்களை சீனா உரிய காலத்தில் வெளிப்படுத்தியிருந்தால் கொரோனா பரவலை தடுத்திருக்க முடியும் என்பது மட்டுமின்றி, மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.

கொரோனா அதி வேகமாக வுஹான் நகரில் பரவியதை அடுத்து இரண்டு மாத காலம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலகட்டத்தில் ஆய்வாளர் Shi உடன் பத்திரிகையாளர் ஒருவர் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அவரிடமே சீன அரசாங்கத்தால் மூடி மறைக்கப்பட்ட இந்த தகவலை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஜனவரி 2 ஆம் திகதி ஆய்வாளர் Shi-ன் ஆய்வகம் மரபணுவை வரிசைப்படுத்தியதுடன், தீர்வையும் கண்டறிந்துள்ளது.

இந்த நிலையில் வுஹான் வைரஸ் ஆய்வகத்தின் தலைவர் Yanyi Wang, பொருத்தமற்ற மற்றும் தவறான தகவல்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துவதாகக் கூறினார். மட்டுமின்றி கொரோனா தொடர்புடைய மேலதிக தகவல்களை இன்னும் வெளியிட Shi உள்ளிட்ட அவரது குழுவினருக்கு தடை விதிக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் ஷாங்காய் ஆய்வாளர்கள் குழு ஒன்று கொரோனாவுக்கான தீர்வை வெளியிட்டது. அடுத்த இரு நாட்களில் அவர்களது ஆய்வகமும் விசித்திர காரணங்களுக்காக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.