கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு பொலிஸ் நிலையத்தால் உதவி
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு நிவாரணப் பொதிகளை கல்முனை பொலிஸ் நிலையத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிவாரணப்பொதிகள் யாவும் சனிக்கிழமை(11) மாலை 5 மணிக்கு கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்த தலைமையில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களிற்கு வழங்கி வைக்கப்பட்டது.
இப்பொதிகளை பெரிய நீலாவணை சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை மணல்சேனை கல்முனை சாய்ந்தமருது உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 60 பேர் தற்போது நாட்டில் நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் அவர்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்தவின் மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு விஷேடமாக மற்றுமொரு நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஜெயசுந்தர இ கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.