SuperTopAds

கொரோனா வைரஸ் அச்சுறுத்துவதனால் இறுகிய இதயங்களை சந்தோஷப்படுத்த புத்தாண்டு கொண்டாட வேண்டும்.

ஆசிரியர் - Editor IV
கொரோனா வைரஸ் அச்சுறுத்துவதனால் இறுகிய இதயங்களை சந்தோஷப்படுத்த புத்தாண்டு கொண்டாட வேண்டும்.

கொரோனா வைரஸ்  எமது பிரதேசங்களில் அச்சுறுத்துவதனால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டாது என்ற போதிலும் கொண்டாட நினைப்பவர்கள்    சுகாதார பழக்க வழக்கங்களையும் அரசாங்க அல்லது சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களையும் கடைப்பிடித்து கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் கிழக்கில் கொண்டாடப்படுவது தொடர்பாக ஊடகவியலாளரிடம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர்

சித்திரை புத்தாண்டை கடந்த காலங்களில் தமிழ் சிங்கள மக்கள்  வீரதீர  விளையாட்டுகளில் கழித்தனர். ஒரு பக்கம் தீன்பண்டங்கள் இன்னொரு பக்கம் புத்தாடை ஒளிவீச அனுஷ்டானங்கள்   களை கட்டியிருந்தது.  எமது பிரதேசங்களில்  இந்த முறை அந்த கொண்டாட்டங்களை நான் எதிர்பார்க்கவில்லை ஏனென்றால் இந்த கோவிட்-19 என்ற ஒரு வைரஸ் ஆகும். எங்கள் அனைவரையும் வீட்டுக்கு உள்ளேயே அது  அடக்கி வைத்திருக்கிறது.

 இருந்தாலும் தமிழ் சிங்கள மக்களுக்கு என்னால்  கூறக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால் இந்த கொண்டாட்டங்களை இறுகிப்போய் இருக்கின்ற  இதயங்களை சந்தோஷப்படுத்த  நீங்கள்   இந்த கொண்டாட்டங்களை நீங்கள் நிச்சயமாக கொண்டாட வேண்டும். ஆனால் பொது சுகாதார பழக்க வழக்கங்களையும் அரசாங்க அல்லது சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களையும் நீங்கள் நிச்சயமாக இறுக்கமாக கையாள வேண்டும் பழைய ஆடைகள் இருந்தாலும் அதை சலவை  செய்து புது ஆடைகளாக  அணிந்து வீட்டில் தீன்பண்டங்களை செய்து நீங்கள் இறைவனை வணங்கி இந்த கொண்டாட்டங்களை வீட்டுக்குள்ளேயே நீங்கள் கொண்டாடவேண்டும்.

எனினும்   பட்டாசு வெடிக்கத் தேவையில்லை .வீட்டுக்குள் நீங்கள் கொண்டாடும் பொழுது அந்த சமூக இடைவெளி எனப்படுகின்ற ஒருவருக்கும் இடையிலான இடைவெளியை நீங்கள் ஒரு மீட்டருக்கு கூடிய தூரம் நீங்கள் பின்பற்றிக் கொள்ள வேண்டும் அந்த வகையில்  நீங்கள் பொதுச் சுகாதார பழக்கவழக்கங்களை  மகிழ்ச்சியும் பொங்க இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களை  வீட்டுக்குள்ளேயே கொண்டாடுங்கள் என்ற விடயத்தை கூறி உங்கள் அனைவருக்கும் எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.