ஊரடங்கு வேளையில் பால் வாங்கிக் கொண்டு மதிலேறி பாய்ந்த இளைஞன் மீது இடிந்து விழுந்த மதில்..! காப்பாற்ற ஆளில்லாமல் பலியான சோகம்..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு வேளையில் பால் வாங்கிக் கொண்டு மதிலேறி பாய்ந்த இளைஞன் மீது இடிந்து விழுந்த மதில்..! காப்பாற்ற ஆளில்லாமல் பலியான சோகம்..

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் பால்வாங்கிக் கொண்டு மதிலேறி பாய்ந்து வீடு செல்ல முயற்சித்த இளைஞன் மீது மதில் இடிந்து விழுந்ததில் காப்பாற்ற யாருமற்ற நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளான். 

இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு- தேவிபுரம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. தேவிபுரம் சந்தியில் உள் ள பால் சாலையில் பால் வாங்கிக் கொண்டு குறித்த இளைஞன் மதிலேறி பாய்ந்து வீடு செல்ல முயன்றுள்ளான்.

இதன்போது மதில் இடிந்து இளைஞன் மீது விழுந்துள்ளது. எனினும் இதனை எவரும் அவதானிக்காத நிலையில் பல மணிநேரம் உயிருக்கு போராடிய இளைஞன் உயிரிழந்துள்ளான்.

பின்னரே மக்கள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதேவேளை உயிரிழந்த இளைஞன் ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த ச.சயனந்தன் (வயது23) என அடையாளம் காணப்பட்டுள்ளான். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு