SuperTopAds

சமூர்த்தி பயனாளிகளுக்கு இலகுவாக நிவாரணங்களை பெற தொலைபேசி இலக்கங்கள்

ஆசிரியர் - Editor IV
சமூர்த்தி பயனாளிகளுக்கு இலகுவாக நிவாரணங்களை பெற தொலைபேசி இலக்கங்கள்

கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு இரு வேறு கொடுப்பனவுகளை துரிதமாக வழங்கி வருவதாக அம்பாறை மாவட்ட    சமூர்த்தி  பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வறிய மக்களுக்கு எவ்வாறான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது என ஊடகவியலாளர்களுக்கு வியாழக்கிழமை(9) வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

எமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு சமூர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பங்களுக்கான  சலுகைக்கடன்10000 ரூபா (சஹன பியவர) கொடுப்பனவு  ஒன்று வழங்கப்படுகிறது. அத்துடன் சமூர்த்தி நிவாரணம் பெறாத ஆனால் சமுர்த்தி நிவாரணம் பெறத்தகுதியான குடும்பங்களுக்கான மானியக் கொடுப்பனவு 5000 ருபாவினை தொடர்ந்து வழங்கி வருகின்றோம்.இத்திட்டமானது 20 பிரதேச செயலகங்களை ஒருங்கியைத்து ஏறத்தாழ 43 சமூர்த்திவங்கிகளின் ஊடாகவும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.   அரசாங்கம்  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களின் நேரடி வழிகாட்டலில் சமுர்த்திப் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் பிரகாரம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

20 பிரதேச செயலகங்கள்  மற்றும் ஏறத்தாழ 43 சமூர்த்தி வங்கிகளை ஒருங்கிணைப்பு செய்து கொரோனா வைரஸ் அனர்த்தங்களினால் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்ட  வறிய  குடும்பங்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை எமது சமூர்த்தி  திணைக்களமானது தற்பொழுது நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

 இதனடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் ஏறத்தாழ 90128 சமுர்த்தி  நிவாரணம் பெறக்கூடிய குடும்பங்கள்  காணப்படுகின்றது

அதில் முதல்கட்டாக    நாங்கள் அரசாங்கத்தின் ஆலோசனைப்படி ஏறத்தாழ  60125 பேருக்கான சகன பியவர   இலகு கடன் வேலை  திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம்.

இதனடிப்படையில் அதற்காக மொத்த செலவீடாக  306  மில்லியன்களை    சமூர்த்தி வங்கிகள் ஊடாக வழங்கி தற்பொழுது முதல்கட்டமாக ரூபா 5000 ரூபாயை சமூர்த்தி பயனாளிக்குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம்.

அதே நேரம் அருணலு இலகு கடன் வசதி ஊடாக சமூர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகள் ஊடாக   ஊடாக சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளின் ஊடாக ஏறத்தாழ 22266 குடும்பங்களுக்கு ரூபா 112 மில்லியன் ரூபாய்களை வழங்கி உள்ளோம்.

மேலும் இதன் மொத்த தொகை  ஏறத்தாழ  418 மில்லியன் ரூபாய்களை இலகு கடன்களாக    சமுர்த்தி நிவாரணம் பெறக் கூடிய குடும்பங்களுக்கு வழங்கி வருகின்றோம்.

 அதற்கு மேலதிகமாக தற்பொழுது ஜனாதிபதியின்  ஆலோசனைக்கமைய சமூக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக நாங்கள் சமூர்த்தியை  பெறுவதற்கு தகுதியான குடும்பங்களுக்கான ரூபா 5000 மானியமாக வழங்கக்கூடிய  வேலைத்திட்டத்தை அம்பாறை மாவட்டத்தில் 43 சமூர்த்தி வங்கிகளின்  ஊடாக நாம் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கின்றோம்

 இந்த மானியத் தொகையானது இரண்டு கட்டங்களாக வழங்கப்படுகின்றது முதற்கட்டமாக சமுர்த்தி உதவி தொகை பெறுவதற்காக காத்திருப்பு பட்டியல் காணப்படக்கூடிய 35133 குடும்பங்களுக்கான ரூபா  5000 வழங்கும் திட்டத்தை தற்போது நாங்கள் ஆரம்பித்துள்ளோம்

அடுத்து கொரோனா வைரஸ் அனர்த் நிலைமை  காரணமாக வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும்  இழந்த  ஏறத்தாழ 28535 மக்களுக்கான  மேலதிக ரூபா 5000 வழங்கக்ககூடிய  மானியத்தை நாங்கள் இனி வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.

 இதற்காக 318 மில்லியன் ரூபாய்களை   அம்பாறை மாவட்டத்திற்கான நாங்கள்  வழங்க உள்ளோம் .மொத்தமாக சேர்த்து பார்த்தால் 63668 குடும்பங்களை இந்த மானியத் திட்டத்தின் கீழ் நாங்கள் இணைக்கவுள்ளோம். ஆகவே அம்பாறை மாவட்டத்தில் இந்த வறுமைக் கோட்டிற்குக் கீழ் காணப்படக்கூடிய மக்களின் வாழ்வாதாரத்தை அவர்கள் இயல்பு நிலையை கொண்டு வருவதற்கு எமது  திணைக்களமானது இந்த மானியங்களையும் கடன்களையும் சமுர்த்தி வங்கிகளின் ஊடாக குறிப்பிட்ட எங்களது கள  உத்தியோகத்தர்களுக்கு வழங்கி  அந்த பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று வழங்கவுள்ளொம் என கூறினார். மேலும்  சமுர்த்தி வங்கியினூடாக இத்திட்டத்தை  செயற்படுத்துகின்றதுடன் அரசின் விடுமுறை மற்றும் ஊரடங்கு என்பவற்றையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக குறைந்த ஆளணியுடன் பல சிரமங்களுக்கும்இஇன்னல்களுக்கும்  மத்தியில் எமது உத்தியோகத்தர்கள்  பணியாற்றி வருகின்றதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மேலும்  அம்பாறை மாவட்டத்தில்  சமூர்த்தி  பயனாளிகளுக்கு ஏற்படும்  சிக்கல்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொள்ளும்  வகையில்    ஒரு பொறிமுறையை  மாவட்ட சமுர்த்தி காரியாலயம்  மேற்கொண்டுள்ளது

 

இதனடிப்படையில் மாவட்ட சமூர்த்தி காரியலய  உள்ளக கணக்காய்வு பிரிவு மற்றும் வங்கியின் முகாமைத்துவப் பிரிவு 24 மணித்தியாலமும்   கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.அதனடிப்படையில்   நாங்கள் ஒவ்வொரு  பிரதேசங்களுக்கும்  குறிப்பிட்ட ஒவ்வொரு  அதிகாரியை நியமித்துள்ளோம்.இவ்வதிகாரிகளை தொடர்பு கொண்டு  பிரச்சினைகளுக்குரிய  உரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்

அந்த பிரச்சனையானது அவ்வாறு தீர்க்கப்படவில்லை  எனின் என்னை  நேரடியாக   தொடர்புபடுத்த முடியும் .அம்பாறை மாவட்டத்தில் காணப்படும்   சிங்கள  மொழி பிரச்சினைகளுக்கு   மாவட்ட முகாமையாளர் தசநாயக்கா   0760707125   கரையோரப் பிரதேசங்கள் அதாவது பொத்துவில் தொடக்கம் கல்முனை வரை நாவிதன்வெளி கல்முனை இறக்காமம் வரை உள்ள பிரதேசங்களில் எழுகின்ற  பிரச்சினைகளுக்காக  மாவட்ட வங்கி முகாமையாளர் ஹனீபா 0777004761 மற்றும் உள்ளக கணக்காய்வு   உத்தியோகத்தர் அமீர் அலி-0777531024  ஆகியோரை தொடர்பு கொண்டு முறையிட முடியும் என தெரிவித்தார்.