கிளிநொச்சி நகரில் அதிரடி சோதனை..! மருந்தடிக்கப்பட்ட பழங்கள், காலாவதியான பொருட்கள் அழிப்பு, பல வர்த்தகர்கள் சிக்கினர்..
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கிளிநொச்சி நகரில் மாவட்ட செயலக அதிகாரிகள், சுகாதா தார பரிசோதகர்கள், பொலிஸார் இணைந்து நடாத்திய சோதனை நடவடிக்கையின்போது காலா வதியான பொருட்கள், மருத்தடிக்கப்பட்ட பழங்கள் அழிக்கப்பட்டிருப்பதுடன்,
பொருட்களை நிர்ணய விலைவிட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டிரக்கின்றது. கிளிநொச்சி நகரில் உள்ள மொத்த வியாபார நிலையங்கள் இவ்வாறு
இன்று விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிளிநொச்சி சந்தையில் உள்ள
அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. சுகாதார பிசோதகர்களு்ம, பொலிசாரும் இணைந்து குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இதன்புாது மருந்தடிகப்பட்ட பழங்கள், காலாவதியான பொருட்கள் ஆகியன அழிக்கப்பட்டன.
குறித்த பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படவுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் இதன்போது தெரிவித்தனர்.