யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கிடையில் 3 ஆயிரம் பேர் நடமாடுகிறார்கள்..! ஊரடங்கு அர்த்தமற்றது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கிடையில் 3 ஆயிரம் பேர் நடமாடுகிறார்கள்..! ஊரடங்கு அர்த்தமற்றது..

யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் பயனற்றதாக மாறுகிறது. என சுட்டிக்காட்டியிருக்கும் மருத் துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் காண்டீபன், அத்தியாவசி ய பொருட்கள் வழங்குவதாக கூறி மாவட்டங்களுக்கிடையில் நடமாட அனுமதிக்கப்படும் சம்பவ ங்கள் அதிகளவில் இடம்பெறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், இன்று ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரியும் ஊரடங்கு நேரத்தில் மாவட்ட எல்லைகளினைத் தாண்டி பயணிக்க 300 மேற்பட்டவர்களுக்கு ஒரு நாளில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிற்து. இந்தச் செயற்பாடு களால் கொரோன வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அத்தியவசிய சேவைக்குரித்தான அரசாங்க உத்தியோத்தர்களுக்குரியதல்ல பெரும்பாலானவர்கள் அத்தியவசிய பொருட்களை வழங்குவதாக கூறி பயண அனுமதிகளை பெறுகின்றனர் இதன் மூலம் யாழ்ப்பணத்தில் மொத்தம் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலிருந்து நாளாந்தம் சுமார் 3000 மேற்பட்டோர் 

இவ்வாறு மாவட்ட எல்லையை கடக்க அனுமதிக்கப்படுகின்றனர்.இது கொரோன பரவலை கட்டுப்படுத்தும் செற்றிட்டம் கேள்விக்குள்ளாகின்றது. இதனை கணிசமான முறையிவல் வடக்கு மாகாண ஆளுநர் மாவட்ட அரச அதிபர் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோர் இதனைக் கட்டுப்படுத்த தேவயைான ஒழுங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும். 

மாவட்ட எல்லைகளை தாண்ட அனுமதிப்பதன் மூலம் கொரோன வைரஸ் தொற்று வடக்கில் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கும் செல்லும் அபாயமுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாண கிளை எச்சிரித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு