SuperTopAds

மத்திய கிழக்கு நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு தனிமைப்படுத்தல் காலத்தின் பின் கொரோனா தொற்று..! 9 குடும்பங்கள் முடக்கப்பட்டன..

ஆசிரியர் - Editor I
மத்திய கிழக்கு நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு தனிமைப்படுத்தல் காலத்தின் பின் கொரோனா தொற்று..! 9 குடும்பங்கள் முடக்கப்பட்டன..

கல்முனை- அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டிருக்கு ம் நிலையில், 9 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த விடயம் தொடர்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில், 

கடந்த 16ம் திகதி மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து இலங்கைக்குவந்தவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டி ருந்தனர். இந்நிலையில் இதே காலப்பகுதியில் குறித்த நபர்களுடன் வந்த 

வேறு மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், கல்முனை பிரதேசத்தில் தனி மைப்படுத்தப்படுத்தலுக்குட்பட்ட 7 பேருடைய இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு 

பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் நிறைவடைந்த பின்னான 5 நாட்களில் குறித்த நபர் சென்ற இடங்கள், 

சந்தித்த நபர்கள், மேலும் வெளிநாட்டிலிருந்து கொழும்பு வந்தபோது கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு அழை த்துவந்த சாரதி உள்ளிட்ட 9 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் வெலிக்கந்தைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அதேபோல் தனிமை ப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகளில் கிருமி நீக்கல் மருந்துகள் 

நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது தெளிக்கப்படும் என்றார்.