SuperTopAds

கொரோனா தடுப்பு செயலணி பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது-மேலதிக அரசாங்க அதிபர்

ஆசிரியர் - Editor IV
கொரோனா தடுப்பு செயலணி பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது-மேலதிக அரசாங்க அதிபர்

கொரோனா தடுப்பு செயலணி பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது என அம்பாறை மாவட்டத்தின்   மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஷன் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை(8) ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில்

அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.ஏ. பண்டாரநாயக்கவின் தலைமையில் கொரோனா தடுப்பு செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.அதே வேளை அரசின் உடைய மக்களுக்கான நிவாரண திட்டங்களை அமுல்படுத்தி உள்ளோம்.சமூர்த்தி பயனாளிகளுக்கு இரு தடவை  வட்டியற்ற முறையில் 5000 ருபா வீதம் 10 ஆயிரம் ரூபாவினை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.விசேட தேவைஉடையோர் முதியோருக்கும் கொடுப்பனவுகளை வழங்கி வருகின்றோம் என குறிப்பிட்டார்.