இந்தியாவில் 5 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!! -149 பேர் பலி-
இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் 149 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 773 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 124ல் இருந்து 149 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 1018 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 690 பேருக்கும், டெல்லியில் 576 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.