உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 13 இலட்சத்தை தாண்டியது!! -75 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு-
உலகில் 13 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
சீனாவின் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது.
இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 13 இலட்சத்து 46 ஆயிரத்து 974 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 74 ஆயிரத்து 702 பேர் உயிரிழந்துள்ளனர். 2 இலட்சத்து 78 ஆயிரத்து 698 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
மருத்துவமனைகளில் 9 இலட்சத்து 93 ஆயிரத்து 574 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 47 ஆயிரத்து 249 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் இத்தாலியில் அதிக அளவாக 16,523 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது.
அங்கு 13,341 பேர் இறந்துள்ளனர். நோய்த்தாக்கம் அதிகம் உள்ள அமெரிக்காவில் 10,876 பேர் பலியாகி உள்ளனர். பிரான்சில் 8,911 பேரும், பிரிட்டனில் 5,373 பேரும், ஈரானில் 3,739 பேரும், சீனாவில் 3,331 பேரும் பலியாகி உள்ளனர்.