SuperTopAds

அம்பாறையில் கொரோனா வைரசை ஒழிக்கும் முகமாக இரத்ததான நிகழ்வு

ஆசிரியர் - Editor IV
அம்பாறையில் கொரோனா வைரசை ஒழிக்கும் முகமாக இரத்ததான நிகழ்வு

கொரோனா  வைரசை நாட்டில் இருந்து ஒழிக்கும் முகமாக சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில்   நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீர்  தலைமையில் குருதிக்கொடை வழங்கி வைக்கும் நிகழ்வு  இடம்பெற்றது.

அம்பாறை மாவட் பிரதி பொஸி மா அதிபர் ஆஷா கருணாரத்ன, அம்பாறை மாவட்ட பொலிஸ் அதிகாரி ஜெயந்த ரத்னாயக்க,  கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்  புத்திக்க விஜயயசுந்தர,  ஆகியோரின்  நெறிப்படுத்தலில் ஞாயிற்றுக்கிழமை(5) பொலிஸ் நிலைய வளாகத்தில் காலை ஆரம்பமானது.

 சமூக பொலிஸ் பிரிவு ,மத தலைவர்கள், விளையாட்டு கழகங்கள், இணைந்து கொரோணா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குருதி கொடையினை வழங்கி வைத்ததுடன் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் இரத்த வங்கியின் பொறுப்பு வைத்திய அதிகாரி என். ரமேஷ் ,தலைமையிலான வைத்தியர்,தாதியர் , நாவிதன்வெளி பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.