SuperTopAds

அம்பாரை மாவட்டத்தில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையில் நிர்ணயவிலை தீர்மானம்

ஆசிரியர் - Editor IV
அம்பாரை மாவட்டத்தில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையில் நிர்ணயவிலை தீர்மானம்

அம்பாரை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் பிரத்தியேகமான சந்தைகள்  மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையிலான நிர்ணய விலைகளை  அமுல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல்   அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட செயலக  கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(4) நண்பகல் இடம்பெற்றதுடன் அம்பாறை மாவட்டத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபர்களாக வி.ஜெகதீஷன்  ஏ.எம்.அப்துல் லத்தீப்  ஆகியோர் உட்பட  பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாரை மாவட்ட அலுவலக  புலனாய்வு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 இதன் போது அரசாங்கம் அத்தியவசிய பொருட்களுக்கு விதித்த நிர்ணய விலை தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கு  இம் மாவட்டத்தில் விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளன.

மேலும்  பிரத்தியேகமாக அமைககப்பட்ட சந்தைகள்  மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மரக்கறி வகைகள் மீன்வகைகள் உள்ளிட்டவைகளுக்கு இந்நிர்ணயவிலை ஒன்றினை தீர்மானிப்பதற்காக இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர  இந்நிர்ணய விலையை மீறி விலைக்கட்டுப்பாடு இன்றி விற்பனை செய்யும் வர்த்க நிலையங்களை  சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அண்மைக்காலங்களாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் சில வியாபாரிகள் எதுவித விலை நிர்ணயமும் இன்றி அதிகரித்த விலைகளுடன் நுகர்வோரை சிரமங்களுக்கு உள்ளாக்கி வருவதாக  பொது மக்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளில அததியாவசியப் பொருள்கள் கிடைப்பதனை உறுதிப்படுத்தும்  முகமாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றதாக உயர் அதிகாரி தெரிவித்தார்.

அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைவாக  மேற்படி  இந்நடவடிக்கைள் தேவையான   செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்க உள்ளதாக  மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.