ஜம்மியத்துல் உலமா மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் மருதமுனை மக்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு

ஆசிரியர் - Editor IV
ஜம்மியத்துல் உலமா மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் மருதமுனை மக்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு

மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் மருதமுனை மக்களுக்கான நிவாரண பொதிகள் விநியோகம்  மருதமுனை மஸ்ஜிதுந்நூர் ஜூம்ஆப்பள்ளிவாசலில்  நடைபெற்றது.

மருதமுனை ஜம்மியதுல் உலமா சபை மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் எம்.ஐ. ஹுசைனுத்தீன் (றியாழி) தலைமையில்  சனிக்கிழமை (04)  நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே. எச்.சுஜித் பிரியந்த, கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் தர்மசேன, பொதுசுகாதார பரிசோதகர்கள், ஆகியோருடன் மருதமுனையின் அனைத்து பள்ளிவாசல்களின் முக்கிய நிர்வாகிகள், பிரதேச முக்கியஸ்தர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் மருதமுனை பிரதேச பள்ளிவாசல்களின் நிருவாகங்களினூடாக நிவாரண பொதிகளினை பெறுவதற்கு தகுதியாக இனம்காணப்பட்ட  பயனாளிகள் பட்டியலிலுள்ள சுமார் 3100 பேர்களுக்கான நிவாரணப் பொதிகள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பரிசோதித்த பின்னர் குறித்த 16 பள்ளிவாசல்களின் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பள்ளிவாசல்களினூடாக பயனாளிகளின் வீடுகளிற்கு பொதிகளை விநியோகிக்கும் ஏற்பாடுகளினை குறித்த பள்ளிவாசல்களின் நிருவாகங்களே  பொறுபேற்றுள்ளதாகவும் செயலனியின் செயலாளர் எம்.எல்.எம். ஜமால்டீன் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு