ரஸ்யாவின் மருத்துவ உபகரணங்கள் பல அமெரிக்கர்களை காப்பாற்றும்!! -டிரம்ப் பெருமிதம்-

ஆசிரியர் - Editor III
ரஸ்யாவின் மருத்துவ உபகரணங்கள் பல அமெரிக்கர்களை காப்பாற்றும்!! -டிரம்ப் பெருமிதம்-

ரஸ்யா வழங்கியுள்ள மருத்துவ உபகரணங்கள் அமெரிக்காவில் பலரது உயிரை காப்பாற்றும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் தத்தளித்துவந்த அமெரிக்காவுக்கு ரஸ்யா அதிபர் விளாடிமிர் புதின் உதவ முன் வந்தார். 

இதற்காக அதிநவீன மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு ரஸ்யாவில் இருந்து மிகப்பெரிய சரக்கு விமானம் அமெரிக்காவுக்கு புறப்பட்டது. 

அந்த விமானம் கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் நகரை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அந்த மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ரஸ்யா அதிபர் விளாடிமிர் புதின் அனுப்பிய மருத்துவ உபகரணங்கள் பலரது உயிர்களை காப்பாற்றும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இது குறித்து வாசிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது:-

அமெரிக்காவுக்கு மருத்துவ உபகரணங்களை ரஷிய அதிபர் புதின் அனுப்பியது மிகவும் நல்ல உபசரிப்பு. ரஸ்யா அளித்த உதவியை நான் வாங்காமல் வேண்டாம் நன்றி என கூறியிருக்கலாம் அல்லது வாங்கிக்கொண்டு நன்றி என கூறியிருக்கலாம். 

புதின் மிகப்பெரிய விமானத்தில் அதிநவீன மருத்துவ உபகரணங்களை அனுப்பியுள்ளார். இந்த உபகரணங்கள் அமெரிக்காவில் பலரது உயிர்களை காப்பாற்றும். ஆகையால், நான் அதை ஏற்றுக்கொண்டேன் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு