இந்தியாவில் 1965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!!

ஆசிரியர் - Editor III
இந்தியாவில் 1965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1834 இலிருந்து 1965 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

எனினும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால், கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்று இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1834 இலிருந்து 1965 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 லிருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 144 லிருந்து 151 பேர் ஆனது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா-265, தமிழ்நாடு-234, கர்நாடகா-110, ராஜஸ்தான்-108 ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு