SuperTopAds

உலகில் கொரோனா பாலி: 41 ஆயிரத்தை கடந்தது!!

ஆசிரியர் - Editor III
உலகில் கொரோனா பாலி: 41 ஆயிரத்தை கடந்தது!!

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவின் ஹ_பேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 202 நாடுகளுக்கு பரவியுள்ளது. 

உலகம் முழுவதும் இதுவரை 8 லட்சத்து 39 ஆயிரத்து 544 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 ஆயிரத்து 328 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 86 பேர் குணமடைந்து சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 6 லட்சத்து 22 ஆயிரத்து 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 31 ஆயிரத்து 473 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-

அமெரிக்கா - 3,501

இத்தாலி - 12,428

ஸ்பெயின் - 8,269

சீனா - 3,305

ஜெர்மனி - 682

பிரான்ஸ் - 3,523

ஈரான் - 2,898

இங்கிலாந்து - 1,789

சுவிஸ்சர்லாந்து - 1,039

ஆஸ்திரியா - 128

தென்கொரியா - 162

கனடா - 95

போர்ச்சீகல் - 160

பிரேசில் - 168

ஸ்வீடன் - 180

அயர்லாந்து  - 54

டென்மார்க் - 90

ருமெனியா - 80

ஈக்வடார் - 75

பிலிப்பைன்ஸ் - 88

ஜப்பான் - 56

இந்தோனேசியா - 136

டெமினிக்கன் குடியரசு - 51

ஈராக் - 50