சீனாவில் இறைச்சி சந்தைகள் திறப்பு. வெளவால், பூனை, முயல் விற்பனை..!
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில் அங்குள்ள இறைச்சி சந்தைகளில் தேள், முயல், பூனைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு சலுகை விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
சீனாவில் பாம்பு, பூனை, வெளவால்களின் இறைச்சி விற்பனை வழமைகா அமோகமாக விற்பனை செய்யப்படும், இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்த விற்பனைகள் கைவிடப்பட்டுள்ளன.
ஹ_பே மாகாணமும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் வுகான் நகரில் சாலை போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து சீனாவில் மீண்டும் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
குயிலின் மற்றும் டாங்குவான் பகுதிகளில் உள்ள ஒரு இறைச்சி சந்தைகளில் நாய், பூனைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு சலுகை விலைக்கு வழங்கப்பட்டன.
பாரம்பரிய மருந்தாக கருதப்படும் வெளவால், தேள், முயல் மற்றும் தோல் உரிக்கப்பட்ட வாத்துகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.