ஊரடங்கு வேளையில் இராணுவத்தினரின் மனிதாபிமான செயல்
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நண்பகல் வேளை இராணுவத்தினர் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் விசேட ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது குறித்த பிரதேசத்தில் வீட்டில் அழகு குரல் கேட்டதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் குறித்த வீட்டிற்கு சென்று அவதானித்த போது சிறுவன் ஒருவனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்து சிறுவனை பத்திரமாக வைத்தியசாலைக்கு அனுமதிக்க ஏற்பாடு செய்தனர்.
மேலும் தெரியவருவதாவது.
குறித்த சிறுவனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்ட வேளை பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர் இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த இராணுவத்தினர் பெற்றோருக்கு ஒத்துழைப்பு வழங்கி சிறுவனை மோட்டார் வாகனத்தில் தாய் தந்தையருடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து சம்பவமானது குறித்த பிரதேசத்தில் நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இராணுவத்தினர் வைத்தியசாலை செல்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஏற்படுத்தித் தருவதாக கூறி ஆறுதல் கூறி மீண்டும் தங்கள் பணிகளை தொடர்ந்தனர்.