அதிரடியாக தேவாலயம் முற்றுகை..! மதபோதகர் மற்றும் 15ற்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டு எச்சரிக்கையின் பின் விடுதலை..
வெங்கல செட்டிகுளம் பகுதியில் மத ஆராதனைக்காக போதகர் ஒருவர் தலமையில் தேவாலயத்தில் ஒன்றுகூடிய சுமார் 15ற்கும் மேற்பட்ட மக்களும் போதகரும் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், பொதுமக்கள் பொது இடங் களில் கூடுவதற்கும், மத வழிபாடுகளில் ஈடுபடவும் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் தடைகளை மீறி தேவாலயம் ஒன்றில் மத ஆராதனைக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தேவாலயத்தை முற்றுகையிட்ட பொலிஸார்,
மத போதகரையும், சுமார் 15ற்கும் மேற்பட்ட பொதுமக்களையும் கைது செய்தனர். எனினும் பின்னர் கடுமையாக எச்சரித்து விடுவித்திருக்கின்றனர்.