SuperTopAds

கொரோனா அச்சுறுத்தலை தடுக்க கல்முனை பகுதியில் கிருமிதொற்று நீக்கி தெளிப்பு

ஆசிரியர் - Editor IV
கொரோனா அச்சுறுத்தலை தடுக்க கல்முனை பகுதியில் கிருமிதொற்று நீக்கி தெளிப்பு

கல்முனை மாநகர சபையினால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுக்கும் முகமாக கல்முனையில் அமைந்துள்ள பொது பஸ் தரிப்பிடம் ஐக்கிய சதுக்கம் உட்பட பல பகுதிகள் விசேட அதிரடிப்படையினர் பொலிஸாருடன் இணைந்து கிருமி தொற்று நீக்கி விசிறி   கழுவி சுத்தப்படுத்தப்பட்டது.

கல்முனை மாநகர சபையின் அனுமதியுடன்  அம்பாறை மாவட்டத்தில் முன்மாதிரியான  கோரானோ தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக  விசேட அதிரடிப்படையினர் பொலிஸார்  மாநகர சபையுடன் இணைந்து சனிக்கிழமை(28) காலை இந் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதற்கமைய கல்முனை பொது பஸ் தரிப்பு நிலையம் கல்முனை ஐக்கிய சதுக்கம் ஆகிய பகுதிகள் தொற்று நீக்குவதற்காக மருந்து விசுறப்பட்டதுடன்  துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றஹீப்பின்  நெறிப்படுத்தலில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சீ .அன்சார் முன்னிலையில் மாநகர் ஊழியர்கள் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர்   தண்ணீர் உட்பட இரசாயன தெளிப்புடன் சுத்தம் செய்யப்பட்டு  முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் ,  கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஜயசுந்தர  ,மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், கல்முனை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த ,விசேட அதிரடிப்படை பிராந்திய பொறுப்பதிகாரி எம்.எச்.ஏ மதுசங்க ,இராணுவ பொறுப்பதிகாரி, உட்பட  சுகாதார உயர் அதிகாரிகள்   என பலரும்   கலந்து கொண்டனர்.